தமிழ்நாடு

நெல்லை தீயணைப்புத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

4th Feb 2021 01:17 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தீயணைப்புத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை நிலைய அலுவலர் வீரராஜ் தலைமை வகித்தார். இதில், சாலையில் செல்லும் வாகனங்களில் ஏற்படும் திடீர் தீ விபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அவர்களுக்கு முதலுதவி அளிப்பது உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில், வட்டார போக்குவரத்து அலுவலர், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT