தமிழ்நாடு

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழா

4th Feb 2021 01:21 PM

ADVERTISEMENT

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு -2 மாணவர்கள் சார்பில் 32 ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 32 ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதன்படி, திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற தெற்கு சரக காவல் உதவி ஆணையர் நவீன்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் கொடிசெல்வம் ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 45 பேர் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகத்தையும் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT