தமிழ்நாடு

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டணம் நிர்ணயம்

4th Feb 2021 06:44 PM

ADVERTISEMENT

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுக் கட்டணமாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.13,610, பி.டி.எஸ். படிப்பிற்கு ரூ.11,610 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.30,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு டியூசன் கட்டணம் ரூ.20,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பி.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கான டியூசன் கட்டணம் ரூ.3,000, எம்.எஸ்.சி. நர்சிங் கட்டணம் ரூ.5,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT