தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: பேரவையில் தாக்கல்

4th Feb 2021 11:59 AM

ADVERTISEMENT


ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

அவசரச் சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், சட்டமாக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உள்ளாட்சித் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் மசோதாவும் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை ஜூன் மாதம் வரை நீட்டிப்பது குறித்த மசோதாவை மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT