தமிழ்நாடு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமைச்சர் காமராஜ்

4th Feb 2021 10:10 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் தீவிர நுரையீரல் பாதிப்புக்குள்ளான உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் வியாழக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 

தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் சுயமாக சுவாசிப்பதில் பிரச்னை இருந்ததால் செயற்கை சுவாச சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. பின்னர் கரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நிலையில், சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டார். 

தொடர்ந்து முழுவதும் குணமடைந்த நிலையில் அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் சில நாள்கள் வீட்டில் ஓய்வு பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT