தமிழ்நாடு

மறைந்த முதல்வர்கள் அனைவரது வீடுகளையும் நினைவில்லமாக மாற்ற முடியாது : உயர்நீதிமன்றம் கருத்து

4th Feb 2021 01:01 PM

ADVERTISEMENT

 

சென்னை, பிப்.4:  மறைந்த முதல்வர்கள் அனைவரது வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், இன்னும் எத்தனை காலத்துக்கு இதுபோன்ற நினைவில்லங்களை அமைக்கப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதையும் படிக்கலாமே.. 60 ஆகிறது தமிழக அரசு ஊழியர்கள்  ஓய்வுபெறும் வயது: விரைவில் அறிவிப்பு

ADVERTISEMENT

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் தரப்பில், ஜெயலலிதா நினைவில்லத்தை பராமரிக்க அறக்கட்டளை அமைத்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், தமிழகத்தில் சமுதாயத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் வீடுகள், நினைவு இல்லங்களாக பராமரிக்கப்படுகின்றன. அந்த தலைவர்கள் வாழ்ந்த வீடுகளை கையகப்படுத்தி நினைவு இல்லங்கள் அமைப்பது  புதிதல்ல எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்துக்குட்பட்டு சட்டம் இயற்றியுள்ளது. இன்னும் எத்தனை காலத்துக்கு இது போன்ற நினைவில்லங்கள் அமைக்கப் போகிறீர்கள்?   மறைந்த முதல்வர்கள் அனைவரின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என கருத்து தெரிவித்தார்.

இதே நிலைத் தொடர்ந்தால் துணை முதல்வர்களின் வீடுகளும் மாற்றப்படும் போலிருக்கிறது. பல நீதிபதிகளும் நீதித்துறைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு சிலை அமைக்க நீதிமன்ற வளாகத்தில் இடம் இல்லை. தமிழக அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது. பின்னர், தீபக்கின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

 

Tags : high court
ADVERTISEMENT
ADVERTISEMENT