தமிழ்நாடு

திருத்தங்கலில் அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்: 19 பேர் கைது

4th Feb 2021 01:49 PM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். 

திருத்தங்கல் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கச் செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

விதிகளை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 4 பெண்கள் உள்பட 19 பேரை காவல்துறையினரை  கைது செய்து அழைத்துச் சென்றனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT