தமிழ்நாடு

பிப். 8 முதல் வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலை.

4th Feb 2021 11:48 AM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., M.Arch., ஆகிய படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ஆம் தேதியும், 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதியும் தொடங்கும்.

மாணவர்களுக்கான விடுதிகள் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோன்று M.E., M.tech., MBA, MCA, M.Sc., ஆகிய படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT