தமிழ்நாடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் கோரிக்கை ஆர்ப்பாட்ட விளக்கப் பிரசாரம்

4th Feb 2021 01:54 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சங்கத்தின் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை தொடர்ந்து வியாழனன்று கும்மிடிப்பூண்டியில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கோரிக்கை ஆர்ப்பாட்ட விளக்கப் பிரசாரம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வட்டார தொடக்கக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைபெற்ற இந்த ஆர்பாட்ட விளக்கக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.பொன்னிவளவன் தலைமை தாங்கி கோரிக்கைகள் குறித்துப் பேசினார்.

நிகழ்விற்கு தலைமை நிலையச் செயலாளர் கோ.முத்துகுமரன், மாநில நிர்வாகிகள் எஸ்.சந்தோஷ்மேரி, கோபி உள்ளிட்டோர் பேசினர். மேலும் அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதில் அரசு பணியாளர்களுக்கான மாநில ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல், பணிக்கொடைத் திட்டத்தை அமல்படுத்துதல், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள் ஆகிய காலமுறை ஊதியப் பணியாளர்களை முழு நேரப் பணியாளர்கள் ஆக்குதல் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை சென்னையில் நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களும் பங்கேற்க வேண்டும் என சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.பொன்னிவளவன் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

இந்த கோரிக்கை விளக்க பிரச்சார நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT