சென்னையில் நாளை இரவு 12 மணிமுதல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் கரோனா பரவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: காவல்துறை கட்டுப்பாடுகள் அறிவிப்பு
இந்நிலையில், சென்னை காவல்துறை வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில்,
டிசம்பர் 31ஆம் தேதி இரவு 12 மணிமுதல் ஜனவரி 1ஆம் தேதி காலை 5 மணி வரை சென்னை காவல்துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் இரவு 12 மணிக்கு முன்னதாகவே தங்களது பயணங்களை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.