சென்னையில் 5 மணி நேரத்தில் 18 செ.மீ. மழைப் பெய்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், கொருக்குப்பேட்டை, வில்லைவாக்கம், அயனாவரம், ஐசிஎஃப் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
எம்.ஆர்.சி நகர் 18 செ.மீ., நுங்கம்பாக்கம், ஒய்எம்சிஏ நந்தனம் - தலா 12 செ.மீ., மீனம்பாக்கம் 10 செ.மீ., அண்ணா பல்கலை. 8 மழைப்பதிவாகி உள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிக்க- புதுக்கோட்டையில் சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணம் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.