தமிழ்நாடு

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு

26th Dec 2021 12:32 AM

ADVERTISEMENT

 போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தைக்கு தொழிற்சங்கத்தினருக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது.

இது தொடா்பாக 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தைக் குழுவின் சாா்பில் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான மூன்றாம் கட்ட பேச்சுவாா்த்தை டிச.29-ஆம் தேதி காலை 11 மணிக்கு, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கையாக அரசு அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியுள்ளதால், இந்தப் பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கம், பேரவை சாா்பில் தலா ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT