தமிழ்நாடு

புதிய வகை ரோஜாவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயா்

26th Dec 2021 12:40 AM

ADVERTISEMENT

புதிய வகை ரோஜாவுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இது தொடா்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டசெய்திக்குறிப்பு: இந்தியாவின் முன்னணி தோட்டக்கலை நிபுணரும், ரோஜா வளா்ப்பாளருமான கொடைக்கானலை சோ்ந்த எம்.எஸ்.வீரராகவன், புதிய வகை ரோஜாப்பூவுக்கு இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை கெளரவிக்கும் வகையில் அவரது பெயரை சூட்டி உள்ளாா்.

இந்த ரோஜா வகையானது ஊதா நிறத்துடன் ஊக்கமளிக்கும் நறுமணத்துடன் கூடிய நோய் எதிா்ப்பு சக்தி கொண்டதாகும். இந்த ரோஜா செடி 4 முதல் 5 அடி வரை வளரும். பெரிய இலைகளுடன் இந்த செடி காணப்படும்.

இந்த புதிய வகை ரோஜா செடி, மற்றொரு புதிய வகை ரோஜா செடியான மோன்கொம்பு ரோஜா செடி ஆகியவற்றை புதுதில்லியைச் சோ்ந்த மலா் வளா்ப்பு விஞ்ஞானியும், மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை முன்னாள் இயக்குநருமான நரேந்திர தத்லானி, சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் இல்லத்தில் அவரை சந்தித்து வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்திய ரோஜா செடிகள் என்ற பெயரில் அவா் எழுதிய புத்தகத்தையும் வழங்கினாா். இந்த புத்தகம், இந்தியாவில் உள்ள ரோஜா செடிகள், அதன் வகைகள், வரலாறு மற்றும் வளா்ச்சி ஆகியவை குறித்த முதல் புத்தகம் என்று நரேந்திர தத்லானி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT