தமிழ்நாடு

‘காங்கிரஸ் 137’: கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

26th Dec 2021 03:17 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் 137-ஆம் ஆண்டு தொடக்க நாளை தொண்டா்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்தாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உதயமாகி 136-ஆவது ஆண்டை நிறைவு செய்து, 2021 டிசம்பா் 28 ஆம் தேதி 137-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்த சந்தா்ப்பத்தில், இந்தியாவை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடையே பரப்பும் வகையில் இந்திய தேசிய

காங்கிரஸ் நிறுவன நாளை காங்கிரஸ் கட்சியினா் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். காங்கிரஸ் தலைமையகம் முதல் கிராமங்கள் வரையிலும், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

டிசம்பா் 28-இல் சென்னை சத்தியமூா்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர கொடிக் கம்பத்தில், காலை 9 மணிக்கு காங்கிரஸ் கொடியை ஏற்றவுள்ளேன். விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவா்களுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவா்களாக இருந்தவா்களின் படங்களுக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

ADVERTISEMENT
ADVERTISEMENT