தமிழ்நாடு

பெரியபாளையம் அடுத்த பாகல்மேட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

23rd Dec 2021 02:53 PM

ADVERTISEMENT

 

பெரியபாளையம் அடுத்த பாகல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகளை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பாகல்மேடு பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். பாகல்மேடு பகுதியில் சாலையோரம் குடிசைகள், அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. 

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தஸ்நேவிஸ் பர்னாண்டோ  தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் உதவி பொறியாளர் ஜெயமூர்த்தி மற்றும் ராஜ்கமல், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராமன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க துணை கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT