தமிழ்நாடு

ஒமைக்ரான் தடுப்பு: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை 

23rd Dec 2021 06:40 PM

ADVERTISEMENT

ஒமைக்ரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் கரோனா உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார். ஏற்கனவே ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் இத்துடன் மொத்தம் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க- சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை

இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. 

ADVERTISEMENT

தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடு விதிக்கலாமா என்பது குறித்து கூட்டத்தில் ஆலாசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT