தமிழ்நாடு

தம்மம்பட்டி சுவேதநதியில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட தரைமட்ட பாலம்!

23rd Dec 2021 02:48 PM

ADVERTISEMENT


தம்மம்பட்டி: தம்மம்பட்டி சுவேதநதியில், தரைமட்டப் பாலம் அமைத்துத்தர வேண்டுமென, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால், பொதுமக்கள் சார்பில் தரைமட்டப்பாலம் அமைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி 5-ஆவது கோனேரிப்பட்டியில், சுவேதநதியைக் கடந்து பெல்ஜியம் காலனி, பாரதிபுரம் பகுதிகளுக்கு சென்று வர வேண்டும். மழைக்காலங்களில், சுவேதநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, மறுகரையில் உள்ள பாரதிபுரம் மக்கள் 7 கி.மீட்டர் தூரம் சுற்றி வந்துதான், தம்மம்பட்டி நகருக்கு வரவேண்டும். 

இதனால், விவசாயிகள், மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால், கோனேரிபட்டி பகுதியில், சுவேதநதியைக் கடக்க, தரைமட்டப் பாலம் கட்டித்தர வேண்டுமென, அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது, சுவேதநதியில் தண்ணீர் பெருமளவு சென்று கொண்டுள்ளது. அதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்று   சேர்ந்து, 4 அடி விட்டமும் 7 அடி நீளமும் உள்ள 6 சிமெண்ட் குழாய்களை போட்டு, தரைமட்டப் பாலம் அமைத்துள்ளனர். இதையடுத்து, பல ஆண்டுகளாக இருந்துவந்த பிரச்சனை, பொதுமக்களின் முயற்சியால், தற்காலிகமாக தீர்வு ஏற்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT