தமிழ்நாடு

ஒமைக்ரான்: தமிழகத்தில் 3 பேர் குணமடைந்தனர்

23rd Dec 2021 10:02 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் குணமடைந்துவிட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் வகை தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (வியாழக்கிழமை) காலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கிங்ஸ் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர் 3 பேர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகக் கூறினார்.

இதையும் படிக்கதமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான்: மா. சுப்பிரமணியன்

அவர் மேலும் கூறியது:

ADVERTISEMENT

"முதன்முதலாக ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட 47 வயதுடையவர் அவரது சகோதரி மற்றும் சகோதரி மகள் குணமடைந்து வீடு திரும்பினர். அவர் 7 நாள்களுக்கு வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களும் வெள்ளிக்கிழமை குணமடைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 31 ஆகக் குறைந்துள்ளது" என்றார் அவர்.

Tags : Omicron
ADVERTISEMENT
ADVERTISEMENT