தமிழகத்தில் புதிதாக 607 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 607 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து தலா 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆந்திரத்திலிருந்து வந்த 3 பேர் மற்றும் மேற்கு வங்கத்தில் வந்த 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு ஒமைக்ரான்
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,56,84,421 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 689 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,98,628 பேர் குணமடைந்துள்ளனர். 8 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 36,707 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 6,889 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
- சென்னை - 145
- கோவை - 92
- செங்கல்பட்டு - 56
மற்ற மாவட்டங்களில் 50-க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளன.