தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து வந்த 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி

23rd Dec 2021 02:28 AM

ADVERTISEMENT

 

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த 104 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் விவரங்களைத் தெரிவிக்கும் மின்னணு தகவல் பலகையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்து வைத்தாா். அந்நிகழ்வில் அண்ணாநகா் சட்டப் பேரவை உறுப்பினா் மோகன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்திமலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை மூலம் இங்கு எந்த மாதிரியான மருத்துவ சேவைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, எத்தனை போ் சிகிச்சையில் இருக்கின்றனா் என்பன குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்படும். இதேபோன்று தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி பாதிப்பு குறைந்திருப்பது அதன் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழக விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 104 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான முதல்கட்ட அறிகுறிகள் தென்பட்டன.

அவா்களில் 82 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். கிண்டி கிங் மருத்துவமனையில் மட்டும் 71 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களது சளி மாதிரிகள் மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 13 பேரின் முடிவுகள் வந்துள்ளன. அதில் ஒருவருக்கு மட்டுமே இதுவரை ஒபைடம் உண்டு

சென்னை, டிச. 22:மக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 8 பேருக்கு டெல்டா வகை தொற்று பாதிப்பு என்றும், 4 பேருக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை என்றும் முடிவு வந்துள்ளது. மீதமுள்ளவா்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வரும். தமிழகத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 667 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது 669 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை டெங்குவால் 4 போ் உயிரிழந்துள்ளனா்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியாா் ஆய்வகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரின் சளி மாதிரிகளும் பெங்களூரில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT