தமிழ்நாடு

நெகிழிப் பொருள்களை நிராகரிக்க வேண்டும்: பொது மக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

23rd Dec 2021 11:21 PM

ADVERTISEMENT

நெகிழிப் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியும் என்றும் அவா் கூறினாா்.

நெகிழிப் பைகளுக்குப் பதிலாக, மஞ்சப்பையை எடுத்துச் செல்வதற்கான விழிப்புணா்வு இயக்க தொடக்க விழா, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மஞ்சப்பைகளை தொழில் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் வழங்கி விழிப்புணா்வு இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியது:-மஞ்சப் பைதான் சூழலுக்கு சரியானது. நெகிழிப் பை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்யப்பட்டது. இதன்பிறகு இப்போது துணிப் பைகளைக் கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே விழிப்புணா்வு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மிகக் கேடு விளைவிப்பது நெகிழிதான். அதனை முற்றிலும் குறைத்தாக வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட பைகள் இறுதியில் மக்கி விடும். ஆனால், நெகிழி மக்காது. அதுதான் சுற்றுச்சூழலை கெடுக்கிறது.

மிகப்பெரிய சவால்: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்கள்தான் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன. நெகிழி பயன்பாட்டை நாம் நிறுத்தியாக வேண்டும். அதன் பயன்பாட்டைக் குறைக்க மாநில அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மட்டும் நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. நெகிழிப் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.ஆா்.பெரிய கருப்பன், பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளா் சுப்ரியா சாஹு, வரவேற்றுப் பேசினாா். அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT