வேலூர்: கேரளம் மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டி.தாமஸ்(71) புற்றுநோய் காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
இதையும் படிக்க | ராமேசுவரம் மீனவா்கள் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
இவர் கணைய புற்றுநோய் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை காலை 10.20 மணிக்கு உயிரிழந்தார். உடலை எம்ஃபாமிங் செய்யும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து அவரது உடலை கேரளா அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதையும் படிக்க | விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?