தமிழ்நாடு

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை. பட்டமளிப்பு விழா

16th Dec 2021 03:17 PM

ADVERTISEMENT

மதுரை: கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 18 ஆயிரம் மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மதுரை காமராசர் பல்கலைக்கழக மு.வ. அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

2019-20 மற்றும் 2020-21 ஆகிய 2 ஆண்டுகளில் படிப்பை முடித்த 18 ஆயிரம் மாணவியர் பட்டம் பெற்றனர். இதில் பிஹெச்.டி 145 பேர், எம்.பில் 845 பேர், முதுகலைப் பட்டம் 3042 பேர், இளங்கலைப் பட்டம் 11,210 பேர், பட்டயம் மற்றும் சான்றிதழ் 2,378 பேர் பட்டம் பெற்றனர். 

இவர்களில் பிஹெச்.டி மற்றும் பதக்கம் பெற்றவர்கள் என 549 மாணவியருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, தெரசா பல்கலை. துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் நிகழ்வில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT