தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.68.09 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

16th Dec 2021 07:19 PM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் ரூ.68.09 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 
பெங்களூரில் உள்ள வருவாய் புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைத்த தகவல்படி, சென்னையிலிருந்து துபைக்க்கு ஃப்ளை துபை விமானத்தில் செல்லத்திட்டமிட்டிருந்த பயணியை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர். 

இதையும் படிக்க - தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

அப்போது அவரது உடமைகளிலிருந்து 68.09 லட்சம் மதிப்பிலான சவூதி ரியால் மற்றும் அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்தனர். 
மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT