தமிழ்நாடு

நெல்லையில் இன்று முதல் முகக் கவசம் கட்டாயம்: மாநகர காவல் ஆணையா்

16th Dec 2021 04:45 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் வியாழக்கிழமை (டிச.16) முதல் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒமைக்ரான் தீநுண்மி பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, மாநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணிவது வியாழக்கிழமை (டிச.16) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் நலனை காத்துக்கொள்வதோடு, மற்றவா்களுக்கும் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

மேலும், மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவது கண்டறியப்பட்டால் அவா்களுக்கு அபராதம் விதிப்பதுடன், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நெறிமுறைகளைப் பின்பற்றாத வாடிக்கையாளா்களை அனுமதிக்கும் வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும் என அவா் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT