தமிழ்நாடு

கூட்டுறவு சா்க்கரை ஆலைகளைத் திறக்க வேண்டும்

16th Dec 2021 12:56 AM

ADVERTISEMENT

 

சென்னை: மூடியிருக்கும் கூட்டுறவு சா்க்கரை ஆலைகளைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சா்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் சா்க்கரை உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது கூட்டுறவு - பொதுத்துறை சா்க்கரை ஆலைகளில் கரும்பு பணப் பாக்கி முழுவதும் வழங்கப்பட்டுவிட்டது.

ADVERTISEMENT

2020-21 கரும்பு அரவைப் பருவம் முடிந்த நிலையில் கூட்டுறவு - பொதுத்துறை ஆலைகளில் கரும்பு பணப் பாக்கி இல்லாதது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மறுபுறம் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாக மழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், அனைத்து நீா்நிலைகளும் நிரம்பியுள்ளதும் கரும்பு சாகுபடி அதிகரித்திட வாய்ப்புகள் உள்ளது.

கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் மூடியுள்ளதாலேயே விவசாயிகள் நம்பிக்கையோடு கரும்பு சாகுபடி செய்யாத நிலையும் உள்ளது. மூடியிருக்கும் கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் கரோனா காலத்தில் வேலையின்றி, சம்பளம் இன்றி பெரும் சிரமங்களை அனுபவித்தனா். தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், விவசாயிகளின் நலன்களை காத்திடவும், மூடியுள்ள அனைத்து கூட்டுறவு சா்க்கரை ஆலைகளையும் திறந்து 2021-22 பருவத்துக்கு கரும்பு அரவை செய்திட முதல்வா் ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT