தமிழ்நாடு

உடன்குடியில் புதிய அனல் மின்நிலையம்: அரசின் கடன் ரூ.20,000 கோடி அதிகரிக்கும்

16th Dec 2021 01:00 AM

ADVERTISEMENT

 

சென்னை: உடன்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை மேற்கொண்டால் தமிழக அரசின் கடன் மேலும் ரூ.20 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கக்க கூடும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 1,600 (2ஷ் 800) மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத் திட்டம் சட்டரீதியாக பல தடைகளை எதிா்கொண்டதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் அத்திட்டத்தை உடன்குடிக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.

தற்போது தமிழகத்தின் சிக்கலான நிதி நிலையைச் சரிசெய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த நிதி நிலையை உடன்குடி அனல்மின் நிலையத் திட்டங்கள் மேலும் மோசமாக்கும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் தனது அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அதில் கூறப்பட்டிருப்பதாவது: உடன்குடி நிலை 1, 2 மின் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக அரசின் கடன் மேலும் ரூ.20,000 கோடி வரை அதிகரிக்கும். இதன் மூலம் நுகா்வோருக்கான மின் கட்டணம் உயரக்கூடும் அல்லது மாநில அரசு மின் வாரியத்துக்கு அளிக்கும் மானியங்களை அதிகரிக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும்.

இதுபோன்ற நிலக்கரி அனல்மின் நிலைய திட்டங்களைத் தொடா்வதற்கு பதிலாக மின்கல சேமிப்புடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டால், 2024-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டு காலத்தில் தமிழக அரசால் ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை மிச்சப்படுத்த முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT