தமிழ்நாடு

13 பேரின் உடல்கள் சூலூர் கொண்டு செல்லப்பட்டன

9th Dec 2021 03:13 PM

ADVERTISEMENT

வெலிங்டன் ராணுவ மைதானத்தில் இருந்து விபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. 

கோவையிலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் புதன்கிழமை பலியாகினர். 

ராணுவ கேப்டன் வருண் சிங் 80% தீக்காயங்களுடன் உயர்தர சிகிச்சை கருவிகள் உதவியுடன் சிகிச்சையில் உள்ளார்.  

உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் சதுக்கத்தில் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கிருந்து சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து விமானம் மூலம் உடல்கள் தில்லி கொண்டு செல்லப்பட்டு நாளை ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. 

ADVERTISEMENT

சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங்கும் உயர் சிகிச்சைக்காக தில்லி கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT