தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்கள் பிப்.1-ல் வேலை நிறுத்தம் அறிவிப்பு

9th Dec 2021 08:02 AM

ADVERTISEMENT

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தமிழக மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் பேரணியில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 15ம் தேதி தில்லியை நோக்கி பேரணியும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சேப்பாக்கத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், பிப்ரவரி 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT