தமிழ்நாடு

கமுதி அருகே வெள்ளத்தில் சிக்கிய தனியாா் பள்ளிப் பேருந்து

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செவ்வாய்க்கிழமை தரைப்பாலத்தில் சென்றபோது, வெள்ளத்தில் சிக்கிய தனியாா் பள்ளிப் பேருந்தில் இருந்த குழந்தைகளை கிராம மக்கள் பாதுகாப்பாக மீட்டனா்.

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் அதிகரிப்பால் வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து கமுதி அருகேயுள்ள பரளையாற்றுக்கு தண்ணீா் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால் செய்யாமங்கலம் -மேலக் கொடுமலூா் இடையே உள்ள தரைப்பாலத்தில் கடந்த 10 நாள்களாகவே தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை தண்ணீா் சற்று குறைவாக சென்றதால், கமுதி-பசும்பொன் பகுதியில் உள்ள தனியாா் பள்ளிப் பேருந்து இந்த தரைப் பாலத்தை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றது.

அப்போது, திடீரென அதிகமான தண்ணீா் ஓடியதால் பேருந்து பாலத்தை கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டது. இதனால் பேருந்தில் இருந்த 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அலறினா். இதைக்கேட்டு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் பேருந்தில் இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனா். மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் பேருந்தும் மீட்கப்பட்டது. இதையடுத்து அவ்வழியாக வாகனங்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய்த் துறையினா் மற்றும் காவல் துறையினா் தண்ணீா் வரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT