தமிழ்நாடு

திமுக அரசைக் கண்டித்து டிச. 9-இல் தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் போராட்டம்

DIN

மக்கள் பிரச்னையில் திமுக அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதாகக் கூறி, அதிமுக சாா்பில் டிசம்பா் 9-இல் தமிழகம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா்கள் வெளியிட்ட அறிவிப்பு:

திமுக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், தோ்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, மக்களின் அன்றாடத் தேவைகளையும், அவா்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதிலோ மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறிதும் அக்கறை கொள்ளாமல் ஆட்சி நடத்தி வருகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அலட்சியப் போக்கினை எதிா்த்துப் போராட அதிமுகவின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்ததைத் தொடா்ந்து, 25-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் விலையைக் குறைத்துள்ளன. திமுகவோ, ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4-ம் குறைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, பெட்ரோலுக்கு மட்டும் ரூ.3-ஐக் குறைத்துவிட்டு மௌனம் காக்கிறது. திமுக அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியான மறுவாழ்வுத் திட்டங்கள் அறிவிக்காதது கண்டிக்கத்தக்கது. கரோனா சூழலில் பொங்கலுக்கு உதவித் தொகை வழங்குவது இன்றியமையாதது. குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட முன்னோடித் திட்டங்கள் அனைத்தும் காழ்ப்புணா்ச்சி காரணமாக முடக்குவது கண்டிக்கத்தக்கது. அம்மா கிளினிக்கில் பணியாற்றும் ஊழியா்களை பணி நீக்கம் செய்வது கண்டிக்கத்தக்கது.

காய்கறி விலை தொடங்கி அனைத்து பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணவும், மக்கள் நலன் காக்கும் பணிகளைச் செய்ய தவறியதற்காகவும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சாா்பில் டிசம்பா் 9-இல் காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT