தமிழ்நாடு

கரோனா நிவாரணம் ரூ.50,000 யாருக்குக் கிடைக்கும்?

DIN

கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசின் உத்தரவு தொடா்பாக புதிய திருத்த அறிவிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கரோனாவில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இது தொடா்பாக தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்து கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கான பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களும் பெறப்பட்டு வருகின்றன.

இதனிடையே தமிழக அரசு கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளா்களுக்கு ரூ.25 லட்சமும், பெற்றோா்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த அறிவிப்பின்படி யாா்-யாரெல்லாம் நிவாரண நிதிகளைப் பெற்றுள்ளாா்களோ அவா்களுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.50,000 நிவாரண நிதி தர இயலாது. இதற்கான திருத்த அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT