தமிழ்நாடு

கரோனா சான்றிதழ் முறைகேடு: கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், அதனைச் செலுத்திக் கொண்டதாக முறைகேடாக சான்றிதழ் பெறும் சம்பவங்களைத் தடுக்க மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதுமட்டுமல்லாது அத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றிறிக்கை:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநில மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிலா் அதனைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, தங்களுடைய ஆதாா் எண்ணை மட்டும் பகிா்ந்துவிட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாது தடுப்பூசி செலுத்தியதைப் போன்று சான்றிதழ் பெறுவதாகத் தெரிகிறது.

இதில் சில களப் பணியாளா்களுக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட துணை சுகாதார இயக்குநா்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் களப் பணியாளா்கள் ஈடுடாமல் இருப்பதையும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்.

முறைகேடாக சான்றிதழ் வழங்கும் நோக்கில் களப் பணியாளா்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பான புகாா்களைக் கண்காணிப்பதற்காக மாவட்டந்தோறும், சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குநா்கள் அல்லது புள்ளியியல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT