தமிழ்நாடு

சீர்காழியில் கொடிநாள் பேரணி

7th Dec 2021 01:22 PM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கொடி நாள்  பேரணி நடைபெற்றது. சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் தலைமை வகித்தார். தாசில்தார் சண்முகம் வரவேற்றார். 

ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ரோட்டரி  துணை ஆளுநர் சாமி. செழியன் முன்னிலை  வைத்தனர். கோட்டாட்சியர் நாராயணன் சீர்காழி டிஎஸ்பி ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  
பேரணியில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

பேரணியானது புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதில் சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், விஜயராணி , வருவாய் ஆய்வாளர் பொன்னி பங்கேற்றனர் .
 

ADVERTISEMENT

Tags : Sirkazhi சீர்காழி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT