தமிழ்நாடு

கொடி நாள்: நிதி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

7th Dec 2021 01:43 PM

ADVERTISEMENT

முப்படை வீரர்களின் கொடி நாளுக்கான நிதியை சென்னை மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

முப்படை வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் தேதி படை வீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு முதல் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

முப்படை வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் நலன்களை காக்கும் பொருட்டு கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி படைவீரரின் குடும்பத்தினருக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

கொடி நாள் நிதிக்கு தாராளமாக நிதி தர வேண்டுமென தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். 

ADVERTISEMENT

இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கொடி நாள் நிதி திரட்டுதலை தொடங்கி வைத்தனர். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கொடி நாளுக்கான நிதியை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜெ.விஜயராணியிடம் வழங்கினார். 

இதையும் படிக்க | கொடிநாள் நிதிக்கு தாராளமாய் நிதி தருக: ஆளுநா்-முதல்வா் வேண்டுகோள்

Tags : MK stalin கொடி நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் flag day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT