தமிழ்நாடு

மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

தென் மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (டிச.6) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் (திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், தருமபுரி) ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச.7: தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் டிச.7-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

டிச.8: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிச.8-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

டிச.9: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் டிச.9-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கரூா் மாவட்டம் ஆனைபாளையத்தில் தலா 90 மி.மீ., கோயம்புத்தூரில் 70 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 60 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, நாமக்கல் மாவட்டம் மோகனூா், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக ஒடிஸா கடற்கரையோரம் நிலைகொள்ளும். இதன் காரணமாக, வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், ஒடிஸா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் திங்கள்கிழமை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT