தமிழ்நாடு

மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

6th Dec 2021 04:32 PM

ADVERTISEMENT

சீர்காழி: சீர்காழியை அடுத்த மாதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சக்தி தலமான முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று நடைபெறும் தீமிதித் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுமார் இரண்டாயிரம் பேர் காப்பு கட்டி தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். 

வேண்டும் வரம் அளிக்கும் தலமான  கோயிலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று  காலை கோயிலுக்கு வருகை புரிந்தார்.

இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான் குறித்து நல்ல செய்தி சொன்ன அமெரிக்க ஆலோசகர்

கோயில் நிர்வாகம் சார்பில் நட்ராஜ்  அவருக்கு வரவேற்பு அளித்தார். தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார் துர்க்கா ஸ்டாலின். பின்னர் கோயில் பிரகாரம் வலம் வந்து வழிபாடு மேற்கொண்டார்.

ADVERTISEMENT

Tags : சீர்காழி துர்கா ஸ்டாலின்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT