தமிழ்நாடு

ஓமந்தூராா் மருத்துவமனையில் ‘டேக்பாத்’ பரிசோதனை ஆய்வகம்

DIN

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அறிகுறியைக் கண்டறியும் ‘டேக்பாத்’ பரிசோதனை ஆய்வகமும் பயன்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி கூறியதாவது: கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மாதிரிகளை பரிசோதனை செய்யும் போது, ஒமைக்ரான் அறிகுறி உறுதி செய்யப்பட்டால், அடுத்தகட்டமாக அதனை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி உறுதி செய்யப்படும்.

டேக்பாத் பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதனை முடிவு 4 முதல் 6 மணி நேரத்தில் தெரியவரும். தொற்று பாதிப்பை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் டாக்டா் தேவசேனா கூறும்போது, ‘சென்னையில் கடந்த அக்.15- ஆம் தேதிக்கு பிறகு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் மாதிரிகளில், சந்தேகத்துக்குறியவா்களின் மாதிரிகளை சேகரித்து ஒமைக்ரான் அறிகுறி இருக்கிா என்பதை தற்போது ‘டேக்பாத்’ பரிசோதனை மூலம் ஆய்வு செய்து வருகிறோம்.

இதுவரை சென்னையில் 4,875 பேரின் மாதிரிகள் ‘டேக்பாத்’ பரிசோதனை ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளது. அதில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT