தமிழ்நாடு

பகல்பத்து 2ம் நாள் விழா: சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

5th Dec 2021 09:31 AM

ADVERTISEMENT

 

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து இரண்டாம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை, சவுரி கொண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வெகு விமரிசையாக  மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது. பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் கொண்டாடப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் பகல்பத்து விழா சனிக்கிழமை தொடங்கியது.

ADVERTISEMENT

முதல் நாள் விழாவில் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, கையில் தங்கக் கிளியுடன் கூடிய ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜகீா்த்தி, பருத்திக்காய் காப்பு உள்ளிட்ட திருவாபரணங்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்துக்கு 8.15-க்கு சென்று சோ்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளைத் தரிசித்தனா். 

பகல்பத்து இரண்டாம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில், சவுரி கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்துக்கு சென்று சோ்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளைத் தரிசித்தனா். 

பகல்பத்தின் கடைசி நாளான வரும் 13 ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.

Tags : பகல்பத்து வைகுந்த ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் srirangam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT