தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களில் 4 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்துக்கு இதுவரை வெளிநாடுகளில் இருந்து 85 விமானங்களில் 12,188 பயணிகள் தமிழகம் வந்துள்ளனா். அதில், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 25 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, கிண்டியிலும், சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த 43 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மதுரையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் உள்பட நான்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, சனிக்கிழமை மாலை வரை, 11 பேரின் மாதிரிகள் உருமாறிய ஒமைக்ரான் கரோனா பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய மரபணு பகுப்பாய்வுக்கு, புணே, பெங்களூரு, சென்னை டி.எம்.எஸ்., ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணியருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கடந்த 10 நாள்களுக்கு முன்னதாக வெளிநாடுகளில் இருந்து வந்தோா் விவரங்களையும் சேகரித்து வருகிறோம். விமான பயணியா் அனைவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனக்கூற முடியாது.  தொற்று கண்டறியப்பட்டவா்கள், உடன் வந்தவா்களை தனிமைப்படுத்தி உள்ளோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தடுப்பூசி போட்டு கொள்வதுடன், முகக்கவசம் அணிவதன் வாயிலாக பாதுகாப்பாக இருக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT