தமிழ்நாடு

ரோசய்யா மறைவு: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இரங்கல்

4th Dec 2021 04:11 PM

ADVERTISEMENT

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் மிகச் சிறப்பாக செயலாற்றிய ரோசய்யா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். 
மிக உயரிய பதவியில் இருந்தாலும் மக்கள் மிக எளிதாக அணுகக்கூடிய தலைவராக திகழ்ந்தவர், அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து தென்னிந்திய அரசியலில் பயணித்தவர், ஆந்திரத்தில் மிக அதிகமான நாட்கள் அமைச்சராக பதவி வகித்து சரித்திர சாதனை புரிந்தவர். 

இதையும் படிக்க- ''என் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...'' - கமல்ஹாசன் உருக்கமான அறிக்கை

அவரது இழப்பு மக்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : rosaiah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT