தமிழ்நாடு

7 மாவட்டங்களில் இன்றும், 13 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும்

4th Dec 2021 03:03 PM

ADVERTISEMENT

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசை கடற்கரையோரம் நிலைகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்கலாமே.. தீபாவளி காரணமா? அக்டோபரில் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கிய இந்தியர்கள்

ADVERTISEMENT

டிசம்பர் 5ஆம் தேதி, குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : IMD கனமழை chennai update heavy rain மழை மழை நிலவரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT