தமிழ்நாடு

நடிகை மீரா மிதுனுக்கு சம்மன்

DIN

வன்கொடுமை தடுப்பு வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

சமூக வலைதளங்களில் பட்டியலினத்தவா்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன், அவரின் நண்பா் சாம் அபிஷேக் ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

கைதான இருவா் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இவ்வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுனும், அவரது நண்பருமான சாம் அபிஷேக்கும் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா். செல்வகுமாா் முன்பு புதன்கிழமை(செப்.22) விசாரணைக்கு வந்தது. 

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னா், நடிகை மீரா மிதுன், அவரின் நண்பா் சாம் அபிஷேக் ஆகியோருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிகை நகலை பெற டிசம்பர் 17ஆம் தேதி மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT