தமிழ்நாடு

தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம்: அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் கைது

3rd Dec 2021 12:02 PM

ADVERTISEMENT

 

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுலகம் முன்பு அண்மையில் பாஜக வர்த்தக அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்த அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக வர்த்தக அணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 இதையும் படிக்க | விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

ADVERTISEMENT

இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன், ஒரு வாரத்துக்குள் வாட் வரியை குறைக்கவில்லையென்றால் மாநிலத் தலைவர் கட்டளையின்படி, மாவட்டத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தவும் தயராக இருக்கிறோம் என்று தெரிவிதிருந்தார். மேலும் தமிழக முதல்வரையும் தரக்குறைவாக பேசினார்.

 இதையும் படிக்க | போடிமெட்டு மலைச்சாலையில் மீண்டும் பாறை சரிவு: போக்குவரத்து நிறுத்தம்

இதையடுத்து அரியலூர் காவல் துறையினர், வழக்குப் பதிந்து அய்யப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags : suicide attack Ariyalur district BJP leader arrested
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT