தமிழ்நாடு

போக்சோ சட்டத்தில் தனியார் பள்ளி தாளாளர் கைது

3rd Dec 2021 01:58 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சியில் போக்சோ சட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி தாளாளரை போலீஸார் கைது செய்தனர். 

திருச்சி மாநகர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஇ மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் அந்தப் பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் உள்ளார். அந்த பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களுக்கான விடுதி செயல்படுகிறது.

அந்த விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவரிடம் ஜேம்ஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உறையூர் காவல் நிலையத்தில் வைத்து ஜேம்ஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசாரணைக்குப்பின் அவர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்ய, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

ADVERTISEMENT

கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : trichy திருச்சி pocso child abuse
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT