தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் ரத்து

3rd Dec 2021 09:28 PM

ADVERTISEMENT

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. 
இதன்படி 2021 மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக முதல்கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகை ஏழு சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags : women self help groups
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT