தமிழ்நாடு

பட்டா பெற்று பழங்குடியின மக்கள் அமைத்து வந்த குடிசைகளை அகற்றிய வனத்துறையினா்

3rd Dec 2021 03:53 PM

ADVERTISEMENT

 

வால்பாறை: அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வசிக்க பழங்குடியின மக்கள் அமைத்து வந்த குடிசைப் பகுதிக்குச் சென்ற வனத்துறையினா் அனைத்து குடிசைகளையும் அகற்றிய சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகக்திற்கு உள்பட்ட வாால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் அருகில் உள்ள வனத்தில் அமைந்துள்ளது கல்லாறு செட்டில்மெண்ட். 

கடந்த 2019 ஆம் ஆண்டு பெய்த கனமழை சமயத்தில் செட்டில்மெண்டில் மண் சரிவு ஏற்பட்டு அனைத்து குடிசைகளும் சேதமடைந்தன. இதனால் அங்கு வசித்த அனைத்து பழங்குடியின மக்களையும் வெளியேற்றிய வனத்துறையினா், தாய்முடி எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்புகளில் தங்க வைத்திருந்தனர்.

ADVERTISEMENT

மண் சரிவு ஏற்பட்ட கல்லாறு செட்டில்மெண்டில் மீண்டும் வசிக்க வனத்துறையினா் அனுமதி மறுத்ததால் அதன் அருகில் உள்ள தெப்பக்குளமேடு ௭ன்ற பகுதியில் இடம் வழங்க கடந்த இரு வருடங்களாக பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினா். இதனையடுத்து கடந்த மாதம் 7-ஆம் தேதி வால்பாறையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கல்லாறு செட்டில்மெண்டை சோ்ந்த 23 பழங்குடியின குடும்பங்களுக்கும் தெப்பக்குளமேடு பகுதியிலேயே வசிக்க நில உரிமை பட்டா வழங்கினாா். 

இதனையடுத்து அங்கு பட்டா பெற்ற பழங்குடியின மக்கள் தெப்பக்குளமேடு பகுதியில் வசிக்க குடிசை அமைக்கும் பணியை மேற்கொண்டுவந்தனர். இன்னும் இரண்டு நாள்களில் குடியேற இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வன ஊழியா்களுடன் அப்பகுதிக்குச் சென்ற மானாம்பள்ளி வனச்சரக அலுவலா் மணிகன்டன், வன ஊழியா்களைக் கொண்டு அங்கு அமைக்கப்பட்ட அனைத்து குடிசைகளையும் அப்புறப்படுத்தியதோடு பழங்குடியின மக்களை அப்பகுதியை விட்டு வெளியேற்றும் முயற்சிலும் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை கல்லார்குடி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தில் போடப்பட்ட குடிசைகளை பிரித்தெரிந்தும் வனமக்களை இழிவாக பேசிய வனத்துறை அலுவலர்களைக் கண்டித்தும் முதல்வரின் உத்தரவை அமலாக்க கோரியும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொள்ளாச்சி துணை ஆட்சியர் அலுவலகம் முன் "கண்டன ஆர்ப்பாட்டம்"  நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : கோவை kovai வனத்துறையினா் valparai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT