தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிவரை திறக்க அனுமதி

3rd Dec 2021 01:07 PM

ADVERTISEMENT

டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிவரை திறக்க தமிழக அரசு வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட்டன.

பின்பு, கரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா பரவல் குறைந்ததையடுத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை மீண்டும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT