தமிழ்நாடு

மதுரையில் தடுப்பூசி போடாதோர் பொதுஇடங்கள் செல்லத் தடை

3rd Dec 2021 06:51 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், தடுப்பூசி செலுத்துவதையும் இன்னும் வேகப்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க- டிச.6 முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

ADVERTISEMENT

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதன்படி, நியாயவிலைக் கடைகள், வியாபார நிறுவனங்கள், திரையரங்குகள், வங்கிகள் உள்பட 18 இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tags : unvaccinated
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT