தமிழ்நாடு

நாகை, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

3rd Dec 2021 04:18 PM

ADVERTISEMENT

நாகப்பட்டினம்: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவானதையொட்டி, நாகை மற்றும் காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. 

வங்கக் கடலில் அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வியாழக்கிழமை இரவு வலுப்பெற்றது. இதையொட்டி, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் வியாழக்கிழமை இரவு 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த நிலையில், அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஜாவத் புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை பிற்பகல் அறிவித்தது. இதையடுத்து, நாகை துறைமுக அலுவலகம் மற்றும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.

புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிக்கும் தூர எச்சரிக்கையாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

Tags : நாகப்பட்டினம் jawad cyclone காரைக்கால் 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT